திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் (Tiruchendur Temple)



<br /> திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் (Tiruchendur Temple)<br />



இந்த கோவில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது .இந்த கோயிலில் கடவுள் முருகன் ஆகும் .முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக இங்குள்ள திருச்செந்தூர் முருகன் கோவில் திகழ்கிறது . இந்த கோவில் இரண்டாம் படை எனப் போற்றப்படும் மிகச் சிறப்புமிக்க கோயிலாகும்.
இந்த கோவிலின் பெயர் சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் இடம்பெற்று உள்ளன .இக்கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவிலாக கருதப்படுகிறது மேலும் இது கோவில் 2000 ஆண்டு காலம் பழமை வாய்ந்ததாகும் . திருச்செந்தூர் என்ற பெயர் முன்னர் காலத்தில் “திருச்சீரலைவாய்” என அழைக்கப்படுள்ளது .

கோவில் அமைப்பு :
இந்த கோவில் கோபுரம் 150 அடி உயரம் கொண்டது மற்றும் இது ஒன்பது தளங்களைக் கொண்டதாக உள்ளது.இந்த கோவிலுக்கு அருகில் வள்ளி குகை ஒன்று உள்ளது . இந்த குகைக்கு ஒரு கதையும் உண்டு முருகன் வள்ளியை திருமணம் செய்வதற்கு முன்னாள் இந்த குகையில் தான் வள்ளியை மறைத்து வைத்ததாக கூறப்படுவது உண்டு .நாழிக்கிணறு என்ற ஊற்று இங்கு உள்ளது. கடலுக்கு மிக அருகில் உள்ள இந்த நீரூற்றில் தண்ணீர் குடிப்பதற்கு சுவையாக இருக்கின்றது.

திருச்செந்தூர் கோவில் செல்லும் வழி :
  • திருநெல்வேலியில் இருந்து இந்த கோவிலுக்கு அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.திருநெல்வேலி – திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி – திருச்செந்தூர் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன .
  • கோவில் அமைந்துள்ள இடம் :




    Comments

    No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *