இந்த திருக்கோவில் தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் மற்ற பெயர்கள் தென்காசி பெரிய கோவில் என்றும் உலகம்மன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.கோவில் வரலாறு: இந்த கோவிலை பாண்டிய மன்னன் கிபி 1445 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.ஒரு நாள் இரவு மன்னர் தூங்கும் பொழுது சிவன் அவருடைய கனவில் தோன்றி என்னுடைய சிலை கோட்டைக்கு வெளியே புதைந்து இருப்பதாகவும் அதை கண்டு பிடித்து அதற்கு கோவில் கட்ட வேண்டும் என்றும் கூறியதாகவும் கருதப்படுகிறது.
மேலும் இங்கு சிவன் கோவில் கட்டுவதற்கான நோக்கம் தெற்கில் உள்ள பக்கதர்கள் வடக்கில் இருக்கும் காசி கோவிலுக்கு செல்லும் வழியிலேயே பக்தர்கள் பாதிபேர் இறந்து விடுவதாகவும் அதனால் அவர்களுக்கு என் அருள் கிடைக்காமல் சென்றுவிடுவதால் தெற்கில் ஒரு சிவன் கோயில் அமைக்க வேண்டும் என்றும் கூறினார் என்றும் கருதப்படுகிறது. தெற்கு + காசி தென்காசி என்ற பெயர் இதனால் தான் தோன்றியது.கோவிலின் ராஜ கோபுரத்தை அப்போது ஆண்ட மன்னர் பரக்கிரம பாண்டிய மன்னரால் கி.பி.1456-ல் கட்ட ஆரம்பிக்கபட்டு அதன் பின்பு அவரது தம்பி குலசேகர பாண்டியரால் கி.பி.1462-ல் முடிக்கப்பட்டது.
இப்போது இருக்கின்ற இந்த அழகான கோபுரம் கிபி 1700 இருந்து 1830 இந்த இடைப்பட்ட காலத்தில் பாளையக்காரர்களுக்குள் ஏற்பட்ட பகையால் மற்றும் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியாலும் இந்த கோவிலில் இருந்த தகவல்களை அளிக்க தீ வைக்கப்பட்டது. ஆனால் அது கோபுரத்தில் தீ பற்றி கோபுரம் பாதி அளிந்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த கோபுரம் 800 மேற்பட்ட சிலைகளாலும் வெவ்வேறு வகையான வண்ணங்களால் நிரப்பப்படுள்ளது. இந்த கோபுரத்தை நம்மால் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும் பார்க்க முடியும். பின் 1967 ல் இதற்காக தனி குழு அமைக்கப்பட்டு 1990 ல் மறுபடியும் கோபுரம் கட்டப்பட்டது. இப்போது இருக்கிற கோபுரம் 180அடி ஆகும்.
கோவின் சிறப்புகள் :
கோவிலுக்கு செல்லும் வழி:
தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மிக அருகில் தான் உள்ளது இத்திருத்தலம்.
தென்காசி ரயில் நிலையத்தில் இருந்து சிறிது தூரம் நடந்து சென்றாலும் இந்த கோவிலை அடையலாம்.