தாமிரபரணி நதக்கரையில் அமைந்துள்ள மிகவும் பழமையான கோவில். கோவில்களில் உள்ள அனைத்து கருவரைகலையும் உள்ளடகியவாறு கோவிலை சுற்றி கருங்கற்களால் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. பாண்டிய மன்னர்களால் இந்த கோவில் சாளுக்கிய பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது என நம்பப்படுகிறது. இக்கோவில் பின்னர் 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர அரசர்களாலும் நாயக்க அரசர்களாலும் மேலும் விரிவுபடுத்தபட்டுள்ளது .நாயக்கர் காலக் கலைபாணியிலான சிற்பங்கள் இக்கோவிலில் காணப்படுகின்றன.1000 ஆண்டு காலப் பழமை வாய்ந்தது இந்த கோவில். இங்கு பாபநாசநாதர் சன்னதியும் உலகம்பால் அம்மன் சன்னதியும் உள்ளது.
தல வரலாறு :
கைலாயத்தில் சிவனுக்கும் சக்திக்கும் திருமணம் நடைபெறும் போது பூமி வடக்கே தாழ்ந்தும் தெற்கே உயர்ந்தும் இருந்தது. சிவன் அகத்தியரை பொதிகை மலையிலைக்கு அனுப்பி வைத்தார். அகத்தியர் சிவனின் திருமணத்தை காணமுடியாமல் போனதால் வேண்டுகோள் விடுத்தார்.அவரின் வேண்டுகோளின்படி சித்திரை மாதப் பிறப்புன்று சிவனும் சக்தியும் திருமண கோலத்தில் இந்த இடத்தில் அகத்தியர்க்கு காட்சிஅளித்தார்.
சுரியஸ்தலம் :
அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை, அதற்கு இடங்கள் தேர்ந்தெடுத்து தருமாறு குருவிடம் வேண்டினார்.சிவனுக்கு அபிஷேகம் செய்யும் தாமரைமலர்களை தாமிரபரணி நதியில் விடுமாறு அந்த மலர்கள் எங்கெல்லாம் கரை ஒதுங்கிறதோ அங்கெல்லாம் சிவஸ்தலங்கலை அமைக்குமாறு குறினார் . அப்படி கரை ஒதுங்கிய 9 மலர்களில் முதலாக ஒதுங்கிய இடம் தான் இந்த பாபநாசம்.எனவே இது சூரிய ஸ்தலமாகும்.
நம்பிக்கை :
இந்த அம்மன் சன்னதிக்கு முன்புறம் உரல் உள்ளது அதில் மஞ்சளை இடித்து அதை அம்மனுக்கு அபிஷேகம் செய்து அந்த தண்ணீரை அருந்தினால் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பாபநாசம் தலையணை :
இந்த அணை கோவில் இருந்து சிறிது தூரம் சென்றதும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. அகத்தியர் அருவி மற்றும் காறையார் நீர் தேக்கத்தில் இருந்து வரும் நீரும் இந்த தலையணையில் தேங்கி பின்பு நதியாக ஓடுகிறது.
கோவிலுக்கு செல்லும் வழி:
இந்த கோவில் அம்பையிலிருந்து 20km , திருநெல்வேலியில் இருந்து 50km தூரத்தில் உள்ளது.இங்கு திருநெல்வேலி பேருந்து நிலையத்திலிருந்தும் அம்பை பேருந்து நிலையத்திலிருந்தும் பஸ் வசதிகளும் உள்ளது.